Friday, April 18, 2014

1000 அர்த்தங்கள்.


இவர்களை பார்த்தவுடன், சட்டென சிரிப்பவரா ? நீங்கள் அப்படி என்றால் ? உங்களுக்கு விரிவான, உயர்வான மனதை இறைவன் கொடுக்கவில்லை என்றே பொருள், மாறாக சிந்தித்து பார்த்தீர்களானால் ! நல்ல எண்ணமுள்ளவர், நன்றி மறக்காதவர், ஆம் சில விசயங்களை வைத்தே சிலரை கணிக்க முடியும் என்பது உண்மைதான், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் கைபேசியின் ஒலியோசையை வைத்துக்கூட ஒருவரது குணதியசங்களை கணிக்க முடியும், என கசாநாயகி கசாநாயகனிடம், சொல்வார். ஆம் இதுவும் உண்மையே உணர்வு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் இறைவன் கொடுத்துள்ளான், அப்படியிருக்க இவர்களும் மனிதர்கள்தானே இவர்களுக்கும் ஒரு வாழ்க்கை வேண்டுமே...

இந்த பெண்மணியை நமது சகோதரியாக நினைத்துப் பாருங்கள் ! உங்களுக்கு சிரிப்பு வராது, மனதுக்குள் இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும், இதைவிட இந்த சகோதரரை நீங்களாக நினைத்துப் பாருங்கள் ? ? ? என்ன கசக்கிறதா ? ஆம், உண்மையின் சுவை கசப்பானதே... இறைவன் நம்மை எத்தனை உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறான் என்பது புலப்படுமே ! தனக்கு தனக்குனா சரீரம் சாரீரம் பாடும் இதுவும் உண்மைதான், 

ஊனமுற்றோர்களை உதாசீனப்படுத்தாதீர்கள், இரண்டு கை, கால்களும் உள்ள உழைக்காத வாழைப்பழ சோம்பேறிகளை விட ஊனமுற்ற உழைப்பாளி உயர்ந்தவரே...

இரண்டு கைகளும் இல்லாத காரணத்தால், கால்களை கொண்டு எழுதுவோர் உண்டு, தனக்கென தானே ஸ்டேரிங் உருவாக்கி கார் ஓட்டும் 23 வயது வாலிபன் உண்டு, வாயால் தூரிகை பிடித்து ஓவியம் தீட்டுவோர் உண்டு, ஒரு கால் இல்லாத மண்வெட்டி தொழிலாளி உண்டு, பிறவியிலேயே கண் இல்லாத எலக்ராணிக் மெக்கானிக்கர் உண்டு, ஒருகால் இல்லாமல் தினம் Abu Dhabi to Sharjah Taxi Trip  அடிக்கும் எனது பாக்கிஸ்தானி நண்பரும் உண்டு, (Automatic Carக்கு மற்றொரு கால் தேவையில்லை என்பது வேறு விசயம்) இன்னும் சொல்லப் போனால் இதயமே இல்லாமல் எத்தனையோ பேர் வாழும் இந்த பூமியில் இறைவன் உனக்கு நல்ல(?இதயத்தை கொடுத்திருக்கின்றாரே... 

இவர்களை எல்லாம் உன் மனக்கண்முன் நிறுத்திப்பார் நீ பாக்கியசாலியென சந்தோஷம் கொள்வாய். இனியும் நீ இவர்களை தாழ்வு மனப்பான்மையுடன் காண்பாய் எனில் உனது ஒரு கையையோ, அல்லது ஒரு காலையோ, மடக்கி கட்டிக்கொண்டு ஒரேயொரு நாள் வாழ்ந்துபார் 1000 அர்த்தங்கள் உனக்கு விளங்கும்.

வால்மீகி தேவகோட்டை 

Friday, April 11, 2014

விதைக்கவா ? புதைக்கவா ?


காணும் கண்களுக்கும் உச்சரிக்கும் உதடுகளுக்கும் கேட்கும் செவிகளுக்கும், நான் வடிக்கும் முத்துக்கள் எமது முத்தங்களுடன் சமர்ப்பணம் எழுதுவது எமக்கு புதிதல்ல....  இந்த பாழும் உலகிற்கு வந்த நான் 12 வது வயதிலேயே எழுத தொடங்கி விட்டேன் வெளியுலகம் தெரியாமல் எமது எண்ணங்கள் எழுத்துக்களாக கருவாகி உருமாறி எமது தலையில் தேங்கி தேங்கி தலை ''கனமாகி விட்டது.
(தாங்கள் உத்தேசிக்கும் கனம் அல்ல) 

அந்த வயதிலேயே எமக்கு கிடைத்த காசுகளை தபால் தலைக்குத்தான் செலவு செய்திருக்கிறேன் எத்தனையோ பத்திரிக்கைகளுக்கு நான் அனுப்பிய கவிதைகள், கட்டுரைகள் சிறுசிறு திருத்தங்கள் செய்யப்பட்டு தலைப்புகளும் பெயர்களும் மாற்றப்பட்டு வெளியானது கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் சிவப்புகண்ணீர் வடித்த காலங்கள் அது எமது முகவரி மறைந்தே வந்து கொண்டிருக்கிறது இருப்பினும் மனம் தளராமல் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.

இந்த விஞ்ஞான காலத்திலும் கடந்த ஐந்து வருடங்களாக வலைத்தளங்களை உருவாக்கி எவ்வளவோ எழுதியிருக்கிறேன் நான் தோல்விகளை தழுவியே வாழ்ந்து பழக்கப்பட்டவன் வெற்றியை நான் இதுவரையிலும் தொட்டதில்லை காரணம் நான் காணவே இல்லையே பிறகு எப்படி தொடமுடியும் ? ஒருவேளை யாம் எழுதிக் கொண்டே இருப்பதற்கு இந்த தோல்விகள்தான் காரணமோ என்னவோ ? இருப்பினும் யாம் மனம் தளராது இறுதிவரை எழுதுவோம் ஏனெனில் எம்மால்  சுவாசத்தை நிறுத்த முடியாது  

எமது தலையில் இருக்கும்
 எண்ணங்களை இந்த வலைத்தளத்தில் உங்களின் பார்வைக்காக உங்களின் கருத்துரைகளுக்காக இறக்கட்டுமா ? இல்லை யாம் இறக்கும்வரை எமது தலையில் இருக்கட்டுமா ? a 
     
Because, I'm near Expiry Date.

என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் போகுமுன் இந்த விண்ணில் விதைத்திட விரும்புகின்றேன் இதுவும்கூட வெற்றியா? தோல்வியா ? யாமறியோம் பராபராமே கீழ் காணும் யாரோ ஒரு நண்பர் எமக்காகவே எழுதியது போலிருக்கும் இந்த வாசகம் அவ்வப்போது என்னுள் ஊடுருவி வெளியேறி செல்வதுண்டு,,,,  அப்பொழுதெல்லாம் எமது மனம் இலகுவாக மாறி இன்னும் எழுதவேண்டுமென எண்ணம் என்னுள் எழுந்து எமது எழுதுகோல் உழுது கொண்டே இருக்கும், நான் முன் மொழிந்ததை வழி‌ மொழிவீர்களா ? இல்லை வழி மறிப்பீர்களா ? என்ற... 

தங்களின் கருத்துக்களுக்காக வழிமேல் விழி வைத்திருக்கும் தேவகோட்டை பாமரன் அபுதாபியிலிருந்து.... VALMEEGI