Friday, April 11, 2014

விதைக்கவா ? புதைக்கவா ?

காணும் கண்களுக்கும் உச்சரிக்கும் உதடுகளுக்கும் கேட்கும் செவிகளுக்கும், நான் வடிக்கும் முத்துக்கள் எமது முத்தங்களுடன் சமர்ப்பணம் எழுதுவது எமக்கு புதிதல்ல....  இந்தபாழும் உலகிற்க்கு வந்தநான் 12 வது வயதிலேயே எழுத தொடங்கி விட்டேன் வெளியுலகம் தெரியாமல் எமது எண்ணங்கள் எழுத்துக்களாக கருவாகி உருமாறி எமது தலையில் தேங்கி தேங்கி தலை ''கனமாகி விட்டது (தாங்கள் உத்தேசிக்கும் கனம் அல்ல) அந்த வயதிலேயே எமக்கு கிடைத்த காசுகளை தபால் தலைக்குத்தான் செலவு செய்திருக்கிறேன் எத்தனையோ பத்திரிக்கைகளுக்கு நான் அனுப்பிய கவிதைகள், கட்டுரைகள் சிறுசிறு திருத்தங்கள் செய்யப்பட்டு தலைப்புகளும் பெயர்களும் மாற்றப்பட்டு வெளியானது கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் சிவப்புகண்ணீர் வடித்த காலங்கள் அது எமது முகவரி மறைந்தே வந்து கொண்டிருக்கிறது இருப்பினும் மனம் தளராமல் எழுதிக் கொண்டே இருக்கிறேன் இந்த விஞ்ஞான காலத்திலும் கடந்த ஐந்து வருடங்களாக வலைத்தளங்களை உருவாக்கி எவ்வளவோ எழுதியிருக்கிறேன் நான் தோல்விகளை தழுவியே வாழ்ந்து பழக்கப்பட்டவன் வெற்றியை நான் இதுவரையிலும் தொட்டதில்லை காரணம் நான் காணவே இல்லையே பிறகு எப்படி ? தொடமுடியும், ஒருவேளை யாம் எழுதிக்கொண்டே இருப்பதற்க்கு இந்த தோல்விகள்தான் காரணமோ ? என்னவோ ? இருப்பினும் யாம் மனம் தளராது இறுதிவரை எழுதுவோம் ஏனெனில் எம்மால் சுவாசத்தை நிறுத்த முடியாது  
எமது தலையில் இருக்கும் எண்ணங்களை இந்த வலைத்தளத்தில் உங்களின் பார்வைக்காக உங்களின் கருத்துரைகளுக்காக இறக்கட்டுமா ? இல்லை யாம் இறக்கும்வரை எமது தலையில் இருக்கட்டுமா ? a      
Because, I'm near Expiry Date.
என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் போகுமுன் இந்த விண்ணில் விதைத்திட விரும்புகின்றேன் இதுவும்கூட வெற்றியா? தோல்வியா ? யாமறியோம் பராபராமே கீழ்காணும் யாரோ ஒரு நண்பர் எமக்காகவே எழுதியது போலிருக்கும் இந்தவாசகம் அவ்வப்போது என்னுள் ஊடுருவி வெளியேறி செல்வதுண்டு,,,, அப்பொழுதெல்லாம் எமதுமனம் இலகுவாகமாறி இன்னும் எழுதவேண்டுமென எண்ணம் என்னுள் எழுந்து எமது எழுதுகோல் உழுது கொண்டே இருக்கும், நான் முன்மொழிந்ததை வழிமொழிவீர்களா ? இல்லை வழிமறிப்பீர்களா ? என்ற தங்களின் கருத்துக்களுக்காக வழிமேல் விழி வைத்திருக்கும் தேவகோட்டை பாமரன் அபுதாபியிலிருந்து....
VALMEEGI


42 comments:

  1. புத்துணர்ச்சியோடு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் இனிய நண்பரே...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. முதல் குட்டு (வாழ்த்து) மோதிரவிரலால் விழுந்திருக்கிறது சுகமான வ(லி)ழியிட்ட இனிய நண்பர் திண்டுக்கல்லாருக்கு முதற்கண் நன்றி.

      Delete
  2. அன்பின் வால்மீகி - நடந்தவை ந்டந்தவையாக இருக்கட்டும் - நடப்பவை நல்ல்வையாக இருக்கும் - வழி மொழிகிறோம் - வழி மொழிவோம் - 1000 தோல்விகளைப் பார்த்தவன் 100 வெற்றிகளைப் பார்த்தவனை விட மேல்.- எழுதுக - எண்ணங்களை எழுத்தாக்குக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. எனது Killergee யிலும் வந்து என்னை கிளர்ச்சியடைய வைத்த நண்பர் Cheena அவர்களுக்கு தொட்டதற்கும், தொடர்வதற்கும் நன்றி. - Valmeegi

      Delete
  3. அன்பு நண்பரே! உமக்கு வயது 46 தானே ஆகிறது! நான் எனது 64 வயதில்தான் முதலாவது சிறுகதை தொகுதியை வெளியிட முடிந்தது. இதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது!

    என்னைப் போலவே, காலம், உமக்கும் நண்பனே. உமது எழுச்சிக்காகக் காத்திருக்கும் காலத்திற்கு நீங்கள் துணை செய்யவேண்டாமா? மீண்டும் புதிதாக எழுதுங்கள். வரவேற்பதற்கு இணைய உலகில் பலர் உண்டு. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பரின் எழுச்சிமிகு வார்த்தைக்கும், எம்மை தொட்டதற்கும், தொடர்வதற்கும் நன்றி, நேரமிருந்தால் ? சென்று வரலாம், எமது www.killergee.blogspot.com

      Delete
  4. ஹை உங்க பெயரைக் கண்டுபிடிச்சி வந்துட்டோம்ல இங்கயும் உங்கள போட்டு வாங்க....

    நண்பரே என்னது எங்களுக்குச் சொல்லவே இல்லை இப்படி ஒரு பெயரில் எழுத்வதைப் பற்றி...நியாயமா...? எழுதுக்னள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து கருத்துரை தந்தமைக்கு நன்றி நண்பரே...

      Delete
  5. ஆஹா ! அண்ணனோட பெயர் தெரிஞ்சிடுச்சி ! அதேநேரம் "iam near to expiry' என்பதையெல்லாம் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது ! அதெற்கெல்லாம் இன்னும் 100 வருடங்கள் இருக்கின்றன . அதனால் எழுதுங்கள் , எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள் அண்ணா !

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே தங்களின் தொடர் ஆதரவைத் தருக...

      Delete
  6. வணக்கம் சகோதரரே!

    //என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் போகுமுன் இந்த விண்ணில் விதைத்திட விரும்புகின்றேன்..//

    நிச்சயம் உங்கள் பதிவுகள் - பதிப்புகள் வலையுலகில் நல்ல இடத்தைப் பெறும்! நம்பிக்கையுடன் தொடர வேண்டுகிறேன்!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆதரவுக்கு நன்றி கவிஞரே...

      Delete
  7. திருநாமத்தின் திருவொளி கண்டேன்
    நாயகரே!
    வலைதளம் வாசல் வந்து வரவேற்கட்டும்

    கலை ஞானமிக்க ஞானி உம்மை!
    வாழ்க! வளர்க!
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே...

      Delete
  8. வணக்கம்!

    "உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை" - இது பழமொழி
    "உணவிட்ட விவசாயிகளுக்கு, வாழ்த்தும், நன்றியும் சொல்வதற்கு
    "குழலின்னிசை"- வலைப் பூ பக்காமாய் வாருங்களேன்!

    "இன்று விவசாயிகள் தினம்" (23/12/2014)

    நன்றி!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. வருகிறேன் நண்பரே...

      Delete
  9. அன்பின் ஜி..
    வாழ்க நலம்!..
    எழுதுங்கள்.. இன்னும் எழுதுங்கள்..
    நாங்கள் காத்திருக்கின்றோம்!..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆதரவுக்கு நன்றி நண்பரே..

      Delete
  10. அட! புதுப்பூவா? நடத்துங்கள்!

    ReplyDelete
    Replies
    1. புதுப்பூ அல்ல நண்பரே.... தேதியை காண்க...

      Delete
  11. அடடா...இத்தனை நாட்கள் தெரியவில்லையே... எழுதுங்கள்...வித்தியாச நடையில் வெற்றி நடை போடுங்கள்...வாழ்த்துக்கள். நன்றி தம 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  12. யார் சொன்னது தாங்கள் வெற்றிப்பெறவில்லை என்று... மொத்த தோல்விகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக வலைசரத்தில் மூலம் மாபெரும் வெற்றி பெற்று விட்டீர்களே...நண்பரே...........

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே.....

      Delete
  13. ஆஹா... ஒன்றில்லை... இரண்டா.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ வருகைக்கு நன்றி

      Delete
  14. ஒரு தளத்துல மட்டும் உங்களை கலாய்ச்சுக்கிட்டு இருக்கலாம்னு பார்த்தா, "நண்பா, இந்த தளத்திலும் வந்து என்னைய கலாய்ச்சுக்கிட்டு இருன்னு" சொல்ற ஒரே காரணத்துக்காக இங்கேயும் வந்து உங்க ஆசையை பூர்த்தி செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ வந்தோமா, பதிவைப்படிச்சோமா, கருத்துரை போட்டோமானு இருக்கனும் சொல்லிப்புட்டேன்.

      Delete
  15. விழுவதெல்லாம் எழுவதெற்கே! எனவே தோல்வியைக்கண்டு துவண்டு போகாமல் வெற்றியை நோக்கி பீடு நடை போடுங்கள். தோல்வியடைந்ததாக எண்ணுவதே தவறு. வெற்றி உங்களுக்கே. வாழ்த்துக்கள் வால்மீகி அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கையூட்டும் தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே....

      Delete
  16. நண்பரே இப்படி ஒரு பதிவில் எழுதுவதை தெரிவிக்கவே இல்லையே
    இது போல் எத்தனை பதிவு எழுதி வருகிறீர்கள்
    தங்களுக்கு பல பதிவுகளை எழுத நேரம் கிடைப்பதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கின்றது
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே தங்களின் ஆதரவைத் தாருங்கள் நன்றி

      Delete
  17. வால்மீகி.. அறியத் தந்தீர்க்கள்...
    இனி நடப்பவை நல்லவையே அண்ணா...
    தொடருங்கள்.. வெற்றி உங்கள் பக்கம்.

    ReplyDelete
  18. மனமார்ந்த நன்றிகள் நண்பரே....

    ReplyDelete
  19. உங்கள் படைப்புகளைத் திருடி வெளியிட்டால் எவ்வளவு வேதனை!!!

    எழுதுங்கள் சகோ..வாழ்த்துக்கள்!
    And, you are not near expiry date, you have a long way to go :))

    ReplyDelete
  20. உண்மைதான் நிறைய திருடப்பட்டு கலங்கி நின்றேன் செய்வதறியாது....
    தங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  21. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. வந்தேன் நண்பரே... கில்லர்ஜியாக....

      Delete
  22. அப்பாடி முச்சு விட முடியல அப்படி ஒரு ஓட்டம் வார்த்தையில அருமை,

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, இங்கும் வந்தது கண்டு சந்தோஷமே.....

      Delete